News Just In

11/20/2025 03:47:00 PM

சாய்ந்தமருதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான கர்ப்பகால வழிகாட்டல் அமர்வு


சாய்ந்தமருதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான கர்ப்பகால வழிகாட்டல் அமர்வு



நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கான கர்ப்பகால வழிகாட்டல் அமர்வு இன்று (20.11.2025) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டலிலும், ஆலோசனையிலும் பொதுச் சுகாதார தாதிய சகோதரி மற்றும் மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது வின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றது.

இவ் வழிகாட்டல் அமர்வில் கர்ப்பகாலச் சத்துணவு, கர்ப்ப காலத்தில் காணப்படும் அபாய அறிகுறிகள், நோய் தடுப்பு வழிமுறைகள், இரத்த சோகை தடுப்பு, பொதுவான கர்ப்ப கால ஆரோக்கிய பராமரிப்பு முறைகள்,
மனநல ஆதரவு மற்றும் மன அழுத்த முகாமைத்துவம், பிறப்பிற்கு முன் தேவையான மருத்துவ பரிசோதனைகளின் முக்கியத்துவம் போன்ற பல முக்கிய அம்சங்கள் தொடர்பாக தாய்மார்களுக்கு விரிவான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுச் சுகாதார மருத்துவ மாது பிரிவு 6 மற்றும் பிரிவு 9 ஆகியனவற்றில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மேலும், நிகழ்வின் இறுதியில் தாய்மார்களிடம் இருந்து கருத்துக் கேட்பும் மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் தேவைகள் மற்றும் சந்தேகங்களுக்கு உடனடி விளக்கங்களும் வழங்கப்பட்டன

No comments: