நூருல் ஹுதா உமர்.
இன்று 27.11.2025 (புதன்கிழமை) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், கல்முனை பிரதேச செயலாளர் மற்றும் கல்முனை பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி ஆகியோர்கள் கலந்து கொண்டு பள்ளிவாசல் காரியாலயத்தில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலின் முடிவின் அடிப்படையில், தற்போது நிலவும் சீரற்ற காலநிலை, கடல் கொந்தளிப்பு மற்றும் அனர்த்த நிலை காரணமாக, பொது மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) ஆகிய திகதிகளில் கொடியேற்ற விழாவுக்காக வருகை தருவதிலிருந்து பொதுமக்கள் தவிர்ந்துகொள்ளுமாறு முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், வழமையான மார்க்கச் செயல்பாடுகள், மஜ்லிஸ்கள் வழக்கம்போல நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் பள்ளிவாசல் வளாகத்தில் பெருமளவில் ஒன்று கூடுதல் மற்றும் கடற்கரை ஓரங்களில் நடமாடுதல் அல்லது தங்கியிருத்தல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் பொது பாதுகாப்பை கருத்தில் கொண்டு முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன.
எல்லா பொதுமக்களும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நம்பிக்கையாளர் சபை மற்றும் அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கு ஒத்துழைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
No comments: