தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலினை சந்தித்த ரவூப் ஹக்கீம்
- மக்கள் மற்றும் கலாசாரம் உறவுகள் குறித்து கலந்துரையாடல்

இந்தியாவின், தமிழ் நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இன்று (10) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் (T. V. S. Tollgate) உள்ள அரசினர் விருந்தினர் இல்லத்தில் மரியாதையின் நிமித்தம் இடம்பெற்ற இச்சந்திப்பில், இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள், இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான மக்கள் உறவுகள் மற்றும் கலாசார உறவுகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
No comments: