மீண்டும் அதே இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பௌத்த தேரர்கள் மற்றும் பெரும்பான்மை இன மக்கள் இணைந்து ஊர்வலமாக எடுத்து வந்து அந்த புத்தர் சிலையினை வைத்துள்ளனர். மேலும், பௌத்த தேரர்கள் இணைந்து பிரித் ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட செயலகத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே அந்த புத்தர் சிலை மீண்டும் அங்கு வைக்கப்பட்டுள்ளதாக அங்கு ஒன்று கூடிய மக்கள் உள்ளிட்ட பௌத்த பிக்குவினர் தெரிவித்துள்ளனர்.
No comments: