.jpeg)
கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டில் நேற்று ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் வழங்கிய பலர் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
இஷாராவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அனுமதி வழங்கிய நிலையில், சஞ்சீவ கொலைக்குப் பிறகு அவர் பல நாட்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் இடங்களை ஆய்வு செய்ய அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவிலில் உள்ள இஷாரா செவ்வந்தி நேற்று கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கியகுற்றச்சாட்டில் நேற்று ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments: