News Just In

10/13/2025 07:42:00 PM

கோட்டாபயவுக்கு சொந்தமான வீடு அரசினால் பறிமுதல்


கோட்டாபயவுக்கு சொந்தமான வீடு அரசினால் பறிமுதல்



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சொந்தமான வீடு அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கதிர்காமம் மெனிக் ஆற்றின் அருகே அமைந்துள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்குச் சொந்தமான வீடு நீதிமன்றத்தால் நீர்ப்பாசனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டினை மொனராகலை நீர்ப்பாசன இயக்குநர் அப்துல் ஜப்பார் கையகப்படுத்தினார்.

எதிர்காலத்தில் அரச அதிகாரிகளுக்கு தங்குமிட வசதிகளை வழங்க இந்த கட்டிடம் பயன்படுத்தப்படும் என்று மொனராகலை நீர்ப்பாசன இயக்குநர் தெரிவித்தார்.

No comments: