அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் உயரம் பாய்தலில் புதிய சாதனை படைத்த களுதாவளை மாணவனுக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - பட்டிப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையைச் சேர்ந்த குகன் பகிர்ஜன் என்ற மாணவன் 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உயரம்பாய்தல் போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அகில இலங்கை மெய்வல்லுநர் போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(12) தியகம மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் உயரம் பாய்தலில் 1.98 மீற்றர் உயரம் பாய்ந்து பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் புதிய சானையை குறித்த மாணவன் படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவன் இன்று காலை தனது பாடசாலைக்குத் திரும்பி வரும் வழியில் அயல் பாடசாலைகளால் வீதியில் நின்று வரவேற்கப்பட்டதோடு, பட்டிருப்பு வலயக் கல்வி கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரனும் மாணவனைப் பாராட்டி வரவேற்றார்.
களுதாவளை மகா வித்தியாலயத்தில் இன்று குறித்த மாணவனுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு,பான்ட் வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டு, பின்னர் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் வைத்து பாராட்டு விழாவும் நடைபெற்றது.
பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 1.98 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய சாதனையைப் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற மாணவனை பாடசாலைக் சமூகம் மற்றும் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து, பொன்னாடை போரத்தி பணப் பரிசும் வழங்கி கௌரவித்தனர்.

No comments: