News Just In

10/14/2025 11:32:00 AM

மோட்டார் வாகன வரி குறைப்பு தொடர்பில் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை


மோட்டார் வாகன வரி குறைப்பு தொடர்பில் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை




மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் குழுவொன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கான முன்மொழிவாக வாகன இறக்குமதியாளர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

சாதாரண பொதுமகன் ஒருவரும் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்யும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளும் வகையில், வரிகளைக் குறைக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 28 ஆம் திகதி அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய பின்னர், ஆகஸ்ட் மாதம் வரை 918 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

No comments: