மட்டக்களப்பில் பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய கார்; மயிரிழையில் உயிர்தப்பிய மூவர்

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த கார் குருக்கள்மடம் முருகன் ஆயத்திற்கு முன்னால் விபத்துக்குள்ளகியுள்ளது.
காரில் மூன்று பேர் பயணித்துள்ள நிலையில் அவர்கள் காயங்களுக்குள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் உயிர் சேதம் ஏற்படாமல் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகியதால் விபத்து இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் பகுதியில் அதிகளவான வளைவுகள் காணப்படுவதாகவும், மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: