News Just In

10/20/2025 11:14:00 AM

கல்முனை கல்வி வலய மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் ஏற்பாட்டில் கல்வியியல் கண்காட்சி !

கல்முனை கல்வி வலய மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் ஏற்பாட்டில் கல்வியியல் கண்காட்சி !


நூருல் ஹுதா உமர்

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் அனுசரணையுடன் நிந்தவூர் கமு/கமு/ அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஏற்பாட்டில் (19) கல்வியற் கண்காட்சியின் இரண்டாவது நாள் அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை யில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிந்தவூர் பிரதேசத்தில் சுமார் 52 வருடங்களின் பின்னர் கல்வியில் கண்காட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இங்கு 33 கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இரண்டாம் நாள் கல்வியியல் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்கல்வியல் கண்காட்சியில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த கூடிய வகையில் பாடங்களின் அடிப்படையில் காட்சிக் கூடங்கள் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் ஏ.சி.ஹாமிது தலைமையில் நடைபெற்ற இக்கல்வியல் கண்காட்சியில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எல்.அப்துல் லத்தீப், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம்.ஜாபீர், திருமதி எச்.எம்.றியாஸா, எம்.எல். எம். முத்தரிஸ், ஏ. சஞ்சீவன், யூ.எல்.றியால், யூ.எல்.எம்.சாஜித் மற்றும் கல்வி அதிகாரிகள், நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாடசாலையின் ஆசிரியர்கள், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம்,எச். ஹாரூன் அம்ஜத் அலி, ஐ.எல். ஜாபிர், எம்.ஜே.எம். ஜுசைல், திருமதி ஜுவைரியா ஜமீல், பாடசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments: