News Just In

10/17/2025 01:40:00 PM

இலங்கை வரலாற்றில் 4 இலட்சத்தைக் கடந்த தங்க விலை

இலங்கை வரலாற்றில் 4 இலட்சத்தைக் கடந்த தங்க விலை



இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று (17) 4 இட்சத்தை கடந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 4 இலட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இதன் விலை இன்று 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

அத்துடன் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்றைய தினம் 13 ஆயிரத்து 800 ரூபாய் அதிகரித்து 379 ஆயிரத்து 200 ரூபாயாக காணப்படுகிறது.

நேற்றைய தினம் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3 லட்சத்து 95 ஆயிரமாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3 லட்சத்து 65 ஆயிரத்து 400 ரூபாயாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



No comments: