News Just In

10/20/2025 11:42:00 AM

மேல்மாகாண 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி தொடங்கியது : இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் தொடக்கி வைத்தார்

மேல்மாகாண 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி தொடங்கியது : இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் தொடக்கி வைத்தார்






நூருல் ஹுதா உமர்

மாளிகாவத்தை இளைஞர் விளையாட்டுக் கழகத்தால் 11வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி அக்டோபர் 19 ஆம் திகதி காலை 8 மணிக்கு பொரளை கேம்பல் மைதானத்தில் ஐ.என்.எம். மிப்லால் மௌலவியின் தலைமையில் தொடங்கியது.

இந்த தொடக்க நிகழ்வில் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் பின் ஆதம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கலந்து கொண்டார். மேலும் மாநகர சபை உறுப்பினர்கள், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், தேசிய வீரர்கள், ஏ-டிவிஷன் கிளப் பயிற்சியாளர்கள், அனுசரணையாளர்கள் என பலரும் விசேட அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

இந்த ஆண்டு சாம்பியன்ஷிப்பில் கிண்ணத்தை வெல்ல மேல்மாகாணம் முழுவதிலுமிருந்து 16 புகழ் பெற்ற அணிகள் போட்டியிடவுள்ளது. அணிகளுக்கான குலுக்கல் அக்டோபர் 1ஆம் தேதி தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் தேசிய வீரர்கள், ஏ-டிவிஷன் கிளப் பயிற்சியாளர்கள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்தப் போட்டி நவம்பர் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப் பிரதம விருந்தினராக கலந்து கொள்வார் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

No comments: