மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்துள்ள காணியில் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அகழ்வுப் பணி, விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் ஆகியோரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.
ஊர்காவல் படைவீரர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வாளியொன்றில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ள நிலையில் இது விடுதலை புலிகள் அமைப்பினரின் ஆயுதம் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டும் வருகின்றது.
மேலும், இந்த ஆயுதங்கள் சஹ்ரானுடைய ஆயுதமா? அல்லது ஹிஸ்புல்லாவினுடைய ஆயுதமா என்ற சந்தேகமும் புலனாய்வுதுறையினரிடம் வலுத்துள்ளது.
No comments: