ஆட்சிக்கு வந்த நாள் முதல் அனுர சொன்னவற்றை மெதுவாகவும் உறுதியோடும் நிறைவேற்றி வருகிறார்.ஆரம்பத்தில் அரச ஊழியர்களை மாறச் சொல்லி வேண்டுகோள் வைத்தார். காலம் கொடுத்தார்.
மாறாதவர்களுக்கு இப்போது நடவடிக்கை – நீதித்துறையிலிருந்து கீழ்மட்டம் வரை! "பாதாள உலகத்தையும் போதைப்பொருள் வியாபாரத்தையும் கட்டுப்படுத்துவோம்" என்றார்.
முன்பு வெளிநாடுகளில் இருந்து தலைவர்கள் பேட்டி கொடுத்தார்கள்.
இன்று அவர்கள் வெளிநாடுகளிலேயே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் சனாதிபதிகளை மரியாதையோடு உத்தியோகபூர்வ வீடுகளில் இருந்து விலகச் சொன்னார்.
சவால் விட்டார்கள் – "வெளியேற்றிப் பாருங்கள்" என. இன்று சட்டமியற்றியபின் மூட்டை முடிச்சோடு நடையை கட்டுகிறார்கள்.
"அரசாங்கம் வெறும் வாய்ப்பேச்சு தான்" என்றவர்கள்,
இப்போது படிப்படியாக புரிந்துகொண்டு வருகிறார்கள்.
அனுபவம் குறைவாக இருக்கலாம்.ஆனால் முனைப்பும் தைரியமும் இந்த அரசிடம் இருக்கிறது.
செய்யவேண்டியதை எப்படியும் அனுர செய்து முடிப்பார்.
நன்றி இது ஒரு முகநூல் பதிவு
No comments: