பாதாள உலகும்பல்களுடன்தொடர்புடையவர்களைஅம்பலப்படுத்தவுள்ள அமைச்சர்கள்!

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புகளை பேணி வந்த அரசியல்வாதிகள், பெயர் பட்டியலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க NPP அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல்வாதிகள் , முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்களின் பாதாள உலக கும்பல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து கடந்த சில நாட்களாக கடுமையான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புகளை பேணி வந்த அரசியல்வாதிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பலர் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி கெஹெல்பத்தர பத்மே , கொமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments: