News Just In

9/11/2025 02:45:00 PM

பட்டிருப்பு பாலம் தொடர்பான எனது முக்கியமான கேள்வியின் போது பாராளுமன்ற அவைத் தலைவரின் தகாத வார்த்தை பிரயோகம்..!

பட்டிருப்பு பாலம் தொடர்பான எனது முக்கியமான கேள்வியின் போது பாராளுமன்ற அவைத் தலைவரின் தகாத வார்த்தை பிரயோகம்..!இரா  சாணக்கியன் 



இன்றையதினம் 11.09..2025 இடம்பெற்ற பாராளுமன்ற கேள்வி பதிலின் போது. பட்டிருப்பு பாலம் தொடர்பான எனது முக்கியமான கேள்விக்கான நேரத்தில் ஆளும்கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் உள்நுழைந்த அவைத் தலைவரின் தகாத வார்த்தை பிரயோகமானது இவ் அரசையும் ஜனாதிபதி அனுரவினதும் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது. எனது கேள்விக்கான பதிலுக்கு இரு கிழமைகள் கால அவகாசம் தேவை எனக் கூறப்பட்டது.

இன்றைய தினம் என்னால் வினாவப்பட்ட கேள்வியாயானது.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு.

மட்டக்களப்பு மாவட்டத்தின், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரிய போரதீவு மற்றும் பழுகாமம் ஆகிய பிரதேசங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாலம் புனரமைக்கப்பட வேண்டுமென்பதையும்; குறித்த பாலத்தின் ஊடான போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வது பொது மக்களுக்கு பெரும் நெருக்கடியாக உள்ளதென்பதையும், அவ்வாறு எனில் மேற்படி பாலத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? என்பதே எனது கேள்வி.

No comments: