- T81 ரக துப்பாக்கி, 97 தோட்டாக்கள், இராணுவ சீருடை மீட்பு

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பாதாள குழு உறுப்பினரான பெக்கோ சமனின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் எம்பிலிபிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து T-81 ரக துப்பாக்கி ஒன்று, அதற்கான 97 தோட்டாக்கள், 2 மெகசின்கள், ஒரு இராணுவ சீருடையை போன்ற சீருடை ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
சந்தேநகபர் எம்பிலிபிட்டிய, கங்கேயாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments: