News Just In

9/03/2025 11:30:00 AM

செம்மணியில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்



செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் நேற்று மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இதுவரை 222 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 206 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 41வது நாளாக யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: