News Just In

8/26/2025 04:16:00 PM

zoom தொழிநுட்பம் வழியாக வழக்கு விசாரணையில் இணைந்த ரணில்

zoom தொழிநுட்பம் வழியாக வழக்கு விசாரணையில் இணைந்த ரணில்


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க zoom தொழிநுட்பம் வழியாக வழக்கு விசாரணையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளால் zoom தொழிநுட்பம் மூலம் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன் விசாரணையின் போது, ​ரணில் விக்ரமசிங்கவின் விரிவான மருத்துவ அறிக்கையை அவரது வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: