News Just In

8/05/2025 06:36:00 PM

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்தை புதுப்பித்த நிகழ்வு!


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்தை புதுப்பித்த நிகழ்வு!



நூருல் ஹுதா உமர்

இலங்கை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்துக்கும் இடையேயான (INSTITUTE OF CHARTERED ACCOUNTANTS OF SRI LANKA) நடைமுறையில் உள்ள ஒப்பந்தத்தை மீளப்புதுப்பிக்கும் நிகழ்வு தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாக கட்டிட கேட்போர் கூடத்தில் 2025.08.05 ஆம் திகதி இடம்பெற்றது.

முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் கணக்கியல் மற்றும் நிதி துறையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சார்பில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தலைமையிலான குழுவினர் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் சார்பில் ஹெஷான குருப்பு தலைமையிலான குழுவினர் கைச்சாத்திட்டு ஆவணங்களைப் பரிமாறிக்கொண்டனர்.

நிகழ்வின்போது பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தினால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூலகத்துக்காக நூலகர் எம்.எம். றிபாவுடீனிடமும் கணக்கியல் மற்றும் நிதித்துறையின் துறைத்தலைவர் எம்.ஏ.சி.என். ஷபானா விடம் ஒரு தொகுதி நூல்களும் கையளிக்கப்பட்டன.

முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபாவின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சார்பில் பேராசிரியர்கள் துறைகளின் தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் சார்பில் துணை தலைவர் திஷான் சுபசிங்க, தலைமை செயலக அதிகாரி லக்மலி பிரியங்கிகா, மாணவர் விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி பணிப்பாளர் மதுஷி ஹபுவரச்சி, கல்விக்குப் பொறுப்பான முகாமையாளர் கல்ஹாரா குணதுங்க மற்றும் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அனிந்திதன் ரவீந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கான செயலமர்வு ஒன்றும் இடம்பெற்றது.

No comments: