News Just In

8/10/2025 10:59:00 AM

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி



முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நுரையீரல் தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2024 நவம்பர் மாதம், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் விவகாரத்தில் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: