அவண்ட் கார்ட் நிறுவனம் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை இன்றைய தினம் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய சகாவான ஓய்வுபெற்ற மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியினால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு சேவை நிறுவனவே அவண்ட் கார்ட ஆகும். இது உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பை வழங்கி வந்தன.
முன்னதாக சர்வதேச வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பு வழங்கும் செயற்பாடு இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட போதும், கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் அதனை அவண்ட் கார்ட் நிறுவனத்துக்குக் கையளித்திருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் அவண்ட் கார்ட் நிறுவனம் பற்றிய புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அதிரடியாக வெளியிட்டுள்ளார். அதன் பிரகாரம் சர்வதேச வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பு வழங்கும் உரிமை அவண்ட் கார்ட் நிறுவனத்திடம் இருந்து ரத்துச் செய்யப்பட்டு, இன்று தொடக்கம் மீண்டும் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
8/18/2025 07:00:00 PM
Home
/
Unlabelled
/
அவண்ட் கார்ட் நிறுவனம் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வர்த்தமானி அறிவித்தல்
அவண்ட் கார்ட் நிறுவனம் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வர்த்தமானி அறிவித்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: