பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணி வரும் அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாதாள உலக கும்பல், அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் இயங்கு வருகின்றது.
அரசியல்வாதிகள் தங்களது அரசியல் தேவைகளுக்காக பாதாள உலக கும்பல்களுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளனர்.
பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணி வரும் அரசியல்வாதிகள் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறு பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளைபேணி வரும் அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்
No comments: