News Just In

8/27/2025 10:58:00 AM

ராஜித தொடர்ந்தும் தலைமறைவு - சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி மனு தாக்கல்

ராஜித தொடர்ந்தும் தலைமறைவு - சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி மனு தாக்கல்



கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வரும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

கொழும்பு தலைமை நீதவானிடம் நேற்று குறித்த மனுவைத் தாக்கல் செய்த கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, ராஜித சேனாரத்னவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரூ.30 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யக் கோரியுள்ளது.

இதன்படி குறித்த மனு நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

முன்னதாகக் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த சமர்ப்பிப்புகளைத் தொடர்ந்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் ராஜித சேனாரத்னவை கைது செய்யப் பிடியாணை பிறப்பித்தது.

இந்தநிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதுடன், அவரது தொலைபேசி இணைப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர் வேண்டுமென்றே கைது செய்வதைத் தவிர்த்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

No comments: