News Just In

8/18/2025 11:04:00 AM

சொந்த இலாபத்திற்காக இனவாதத்தை தூண்டும் சுமந்திரன்: வெளியிடப்பட்ட கண்டனம்


சொந்த இலாபத்திற்காக இனவாதத்தை தூண்டும் சுமந்திரன்: வெளியிடப்பட்ட கண்டனம்

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தான் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காக தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டுவதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அன்றாடம் வேலை செய்பவர்களின் வருமானத்தை பற்றி கவலைப்படாமல் கடையடைப்பு போராட்டத்தை நடத்துமாறு சுமந்திரன் கூறுகின்றார்.

நீதிமன்றத்திற்கு இன்று விடுமுறை தினம் என்பதால் அவருக்கு சேர வேண்டிய வருமானம் வந்து சேர்ந்து விடும்.

எனவே, இது போன்ற கடையடைப்பு போராட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

No comments: