News Just In

8/26/2025 01:46:00 PM

வாழைச்சேனை - கருவாக்கேணியில்ரம் ஒன்றில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு

வாழைச்சேனை - கருவாக்கேணியில் இளைஞன் சடலமாக மீட்பு


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - கருவாக்கேணி பிரதான வீதியில் அமைந்துள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்துக்கு முன்னாலுள்ள மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (26) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

17 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இளைஞனின் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

No comments: