News Just In

8/01/2025 01:59:00 PM

அக்கரைப்பற்று மேயரினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் மின்மினி மின்ஹா !

அக்கரைப்பற்று மேயரினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் மின்மினி மின்ஹா !


(நூருல் ஹுதா உமர்)

கிழக்கு மாகாணம், சம்மாந்துறையை சேர்ந்த 14 வயது மாணவி ஜலீல் பாத்திமா மின்ஹா அண்மையில் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற தமிழ் லெட்டர் ஊடக அமைப்பின் 9 வது ஆண்டு நிறைவு அச்சம் தவிர் விழாவில் பொன்னாடை போர்த்தி,பதக்கம் அணிவிக்கப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவர் காலநிலை மாற்றங்கள், பிளாஸ்டிக், பொலித்தீன் பாவனை எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு உரைகளை நிகழ்த்தி வரும் சிறுமியான இந்த மின்மினி மின்ஹா சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் தரம் 09 கல்வி கற்று வருகிறார். மரங்களை நடும் செயற்திட்டம், கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் வேலைத்திட்டம், ஊனுக்கு உதவுவோம் எனும் செயற் திட்டம், மின்மினி சமூக சேவை அமைப்பு போன்றவைகளின் ஸ்தாபகராக இருந்து வழி நடத்தி வருகிறார். இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை சுய முயற்சியில் நடுவதோடு, இலங்கை தீவில் விழிப்புணர்வு உரையினை இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிகழ்த்தியுள்ளார்.

இலங்கை தேசத்தில் பற்பல அமைப்புகளால் 75க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுக் கொண்டதுடன், "தெற்காசிய நாடுகளில் மிக வயது குறைந்த சுற்றுச்சூழலியல் விழிப்புணர்வாளர்" என்ற சர்வதேச விருதோடு; உலகளாவிய ரீதியில் 20க்கும் மேற்பட்ட விருதுகளையும் ,பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்ட மிக வயது குறைந்த சிறுமி ஆவார்.

இவரின் இளவயது பணியை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று மாநகரசபையின் முதல்வர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபை பேரவை செயலாளர் கலாநிதி எம். கோபாலரட்ணம் கௌரவ அதிதியாகவும் மேலும் கல்வியலாளர்கள், வர்த்தக பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

No comments: