News Just In

8/01/2025 09:51:00 AM

"ஒரு ஆற்றல் மிக்க குடிமகன், ஒரு வெற்றிகரமான நாடு" கிரிக்கெட் போட்டி : சம்மாந்துறை பிரதேச சபை அணி சாம்பியன்!

"ஒரு ஆற்றல் மிக்க குடிமகன், ஒரு வெற்றிகரமான நாடு" கிரிக்கெட் போட்டி : சம்மாந்துறை பிரதேச சபை அணி சாம்பியன்!


நூருல் ஹுதா உமர்

"ஒரு ஆற்றல் மிக்க குடிமகன், ஒரு வெற்றிகரமான நாடு" என்ற அரசாங்கத்தின் விளையாட்டு கொள்கையின் கீழ், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச செயலகம் புதன்கிழமை சம்மாந்துறை மத்திய கல்லூரி மைதானத்தில் சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்தது. இப்போட்டியில் சம்மாந்துறை பிரதேச சபை அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

இப்போட்டியில் அணிக்கு 11 பேர் கொண்ட 6 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்மாந்துறை பிரதேச சபை அணி, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அணி, சம்மாந்துறை பிரதேச செயலக அணி A, அணி B உள்ளிட்ட 04 அணிகள் பங்குபற்றி இறுதிச் சுற்றுக்கு சம்மாந்துறை பிரதேச சபை அணியும், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அணியும் தெரிவானது.

நேரத்தை கருத்தில் கொண்டு, இறுதிச்சுற்றுப் போட்டி 05 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சம்மாந்துறை பிரதேச சபை அணி முதலில் துடுப்பெடுத்தாட 5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 61 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அணி 5 ஓவர்கள் நிறைவில் விக்கெட்டுகளை இழந்து 45 ஓட்டங்களை பெற்று தோல்வியைத் தழுவி கொண்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, சம்மாந்துறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.டி.எம்.ஜனூபர், நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமீல், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுசைன், பிரதி அதிபர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறந்த ஆட்டநாயகன் விருதை சம்மாந்துறை பிரதேச சபை அணியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் எம்.ஆர். ஆசிக் முஹம்மட் பெற்றுக்கொண்டார்.

No comments: