News Just In

8/27/2025 06:17:00 AM

நீதிமன்றத்தில் திக் திக் நிமிடங்கள்... பயத்தில் உறைந்த திலீப பீரிஸ்!

நீதிமன்றத்தில் திக் திக் நிமிடங்கள்... பயத்தில் உறைந்த திலீப பீரிஸ்!


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை தொடர்பிலான கடந்த 22ஆம் திகதி வழக்கு நாள் முடிவுக்கு வந்ததும் வெளியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தான் நீதிமன்றத்திற்குள் இருக்க வேண்டியேற்பட்டதாக மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறை சார்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தனது வாதப் பிரதிவாதங்களை முன்வைத்த போது, தனக்கு பல இடையூறுகள் ஏற்பட்டதாகவும் நீதிமன்ற நடவடிக்கைகள் காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகவும் திலீப பீரிஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த வழக்கு நாளில் வெளியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக ஒரு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த வகையான நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகார வரம்பிற்குள் குண்டர்கள் மற்றும் வெறுப்புணர்வை அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நீதி தேவதையின் கைகளில் வாளைப் பயன்படுத்துமாறும் நீதிபதியிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments: