News Just In

8/02/2025 03:50:00 PM

இவாஸ்ட் சமூக சேவை அமைப்பினரால் பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் கௌரவிப்பு

இவாஸ்ட் சமூக சேவை அமைப்பினரால் பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் கௌரவிப்பு



நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை இவாஸ்ட் சமூக சேவைகள் அமைப்பினரால் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று அமைப்பின் உறுப்பினர் ஏ.பி.இஃஜாஸ் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்மாந்துறை மத்திய வட்டாரத்தில் தனது கன்னி அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த அமீர் அப்னான் சமூகத்தின் மீது கொண்ட அதீத கரிசனைகளுக்கு மக்கள் வழங்கிய அங்கீகாரமாக அதிகூடிய வாக்குகள் வித்தியாசத்தில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

அதை கௌரவிக்கும் வகையில் 2015 சாதாரண தர மற்றும் 2018 உயர்தர நண்பர்களை உள்ளடக்கிய இவாஸ்ட் அமைப்பின் உறுப்பினர்களால் அமீர் அப்னான் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

No comments: