News Just In

8/12/2025 05:49:00 PM

புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய

புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய



37 ஆவது காவல்துறை மா அதிபராக, தற்போதைய பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசியலமைப்பு பேரவை, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (12.08.2025)பிற்பகல் கூடியிருந்த நிலையில், இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து காவல்துறைமா அதிபருக்கான பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது.

இதனையடுத்து பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரை புதிய காவல்துறை மா அதிபர் பதவிக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்து அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பியிருந்தார்.

இந்த நிலையிலேயே காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரியவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments: