News Just In

8/02/2025 04:01:00 PM

மட்டக்களப்பு, வெல்லாவெளியில் யானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை மரணம்!

யானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை மரணம்!



மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாணிக்கம் இராமலிங்கம் என்ற 4 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு அதிகாலை சென்ற போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் த.கயசீலன், படுகாயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணியை முன்னெடுத்திருந்தார்.

படுகாயமடைந்தவரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







No comments: