News Just In

8/27/2025 10:34:00 AM

அதிகாலையில் விபத்து - மாணவர்கள் உட்பட 3 பேர் பலி : பலர் படுகாயம்


அதிகாலையில்  விபத்து - மாணவர்கள் உட்பட 3 பேர் பலி : பலர் படுகாயம்


குருணாகல் குளியாப்பிட்டியில் இன்று காலையில் சம்பவித்த கோர விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்லப்பிட்டி பகுதியில் பாடசாலை வேன் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்களில் பாடசாலை வேன் ஓட்டுநரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 13 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments: