News Just In

8/01/2025 06:15:00 PM

செம்மணியில் நேற்று 3 எலுப்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் நேற்று 3 எலுப்புக்கூடுகள் அடையாளம்!



யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது புதிதாக 3 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வின் 26ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.

நேற்றைய அகழ்வின் போது மூன்று மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. மூன்று மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 118 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 105 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

No comments: