News Just In

8/27/2025 05:44:00 PM

போரதீவுப்பற்று - வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (26) வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

போரதீவுப்பற்று - வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (26) வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.


போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் திரு சோ.ரங்கநாதன் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. இதில் நானும் சக பாராளுமன்ற உறுப்பினர்களும், போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் வி.மதிமேனன் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், சுற்றுலாத்துறை சார்ந்த பிரதேசமாக பழுகாமம் ஆற்றின் நடுவில் உள்ள கொக்குபீச்சி மற்றும் மண்டூர் - குறுமண்வெளி படகுச் சேவையினை அண்டிய பிரதேசங்களை மாற்றுவதற்கான திட்டங்களை காணிப்பயன்பாட்டுக் குழுவில் இணைத்து சிபார்சு பெறப்படுவதற்கான தீர்மானம் எட்டப்பட்டது. இந்த திட்டத்தினை போரதீவுப்பற்று பிரதேச சபை முன்னெடுக்கும்.

சுரவணையடியூற்றில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைக்கான புதிய கட்டடம் ஒன்றினை அமைப்பதற்கான சிபார்சும் இக்கூட்டத்தில் பெறப்பட்டது.

பின்னர் யானை வேலி அமைத்தல், குடிநீர்ப் பிரச்சினை, காணி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என மக்களின் பல பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டது.

No comments: