பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் (19) கேள்வி எழுப்பினார்
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான கேள்விகளை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது இன்று (19) கேள்வி எழுப்பினார். அவர் மேலும் பல கேள்விகளை விடயதான அமைச்சரிடம் கேட்டார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாரிகாலத்தில் மழை பெய்யத் தொடங்கி விட்டால் பிரதான வீதிகளினால் கூட பயணம் செய்ய முடியாத நிலை வெள்ளம் ஏற்படுகின்றது. இங்கு நிரந்தரமான வடிகான் அமைப்பு இன்மையின் காரணமாகவே இவ்வாறு நடைபெறுகின்றது. வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான மட்டக்களப்பு கல்முனை வீதி, மட்டக்களப்பு திருகோணமலை வீதி ஆகிய வீதிகளில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும். பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கடந்த வருடம் 51 மில்லியன் ரூபாய் நிதியாகும். அந்நிதியானது இங்கே குறிப்பிடப்படும் வடிகாலமைப்பு திட்டங்களை முன்னெடுக்க பேதாது. ஆகவே உங்களின் அமைச்சின் கீழ் வரும் அனர்த்த முகாமைத்துவ நிலையமூடாக இந்த வெள்ள அனர்த்தத்தை இல்லாமல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியுமா என கேள்வியெழுப்பினார். தொடர்ந்து, அவர் இரண்டாவது கேள்வியையும் கேட்டிருந்தார். மாகாண சபைகளுக்கும் பொறுப்பான அமைச்சராக இவர் இருக்கின்றார். பி.எஸ்.டி.ஜி திட்டத்தினூடாக வந்த நிதியானது எவ்வாறு வந்தது என்று மக்கள் பிரதிநிதிகளாகிய எமக்கும் தெரியாது. அது மாகாண சபையும் தொடர்புபட்ட விடயம். இந்த பணிகளை மக்கள் எதிர்பார்ப்பின் அடிப்டையில் செய்ய வேண்டுமாக இருந்தால் மாகாண சபைகள் இயங்கு நிலையில் இருந்தால் மாத்திரமே முடியும். பாராளுமன்றம் உள்ளது. அமைச்சரவை உள்ளது. ஆகவே மாகாண சபை ஆட்சி தேவையா என தங்கள் கட்சி சார்ந்த அமைச்சர்களின் கேள்வியாகவுள்ளது.
அந்த வகையில், நானும் ஒரு மாகாண சபைகள் தேர்தல் தொடர்பான சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றேன். இதில் பழைய முறை மூலம் மாகாண சபைத் தேர்தலை நடாத்தலாம் என கூறியிருக்கினறோம். அந்த சட்ட மூலத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால் அரசாங்கத்தினுடைய சட்ட மூலமாகக் கொண்டு வந்து மிக விரைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம். ஆளும் கட்சியானது மாகாண சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பில் மாறி மாறி கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்த வடிகான் அமைப்பு சிறிய தேவையை கூட மக்கள் பிரதிநிதியாகிய எம்மால் செய்ய முடியாதுள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடாத்தி வடிகான் அமைப்பு போன்ற தேவைகளை மக்கள் பிரதிநிதிகளால் செய்யக் கூடியளவிற்கு அதிகாரங்களை எப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குவீர்கள் என்ற இந்த கேள்விக்கும் இந்தச் சபையில் பதில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
8/20/2025 10:57:00 AM
Home
/
Unlabelled
/
பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று (19) கேள்வி எழுப்பினார்
பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று (19) கேள்வி எழுப்பினார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: