உயர்தரத்தில் தொழிற்கல்வி (NVQ) பாடநெறிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வெளியான தகவல்
2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்விப் பிரிவுக்கு தரம் 12இல் சேர்வதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.
கல்வி அமைச்சின் கூற்றுப்படி, விண்ணப்பப்படிவம், விண்ணப்பிக்கக்கூடிய பாடசாலைகளின் பட்டியல் மற்றும் தொழிற்பயிற்சித் துறைகள் உள்ளிட்ட தகவல்கள் கல்வி அமைச்சின் இணையதளத்தில் சிறப்பு அறிவிப்புகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் பிரிவுக்கு மாணவர்களைச் சேர்ப்பதில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், இந்த முறை மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பில் சேரவும், 13ஆம் வகுப்பு வரை பாடசாலை கல்வியைத் தொடரவும், உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வித் தகுதியை (NVQ 4) பெறவும் வாய்ப்பளிக்கிறது
2024 (2025) அல்லது கடந்த 2 ஆண்டுகளுக்குள் சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொண்ட எந்தவொரு மாணவரும் தங்கள் பகுதியில் தொழிற்கல்வி பிரிவு உள்ள பாடசாலையில் 12ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
12 ஆம் வகுப்புக்குச் சேரும் மாணவர்கள் மென் திறன்களை வளர்ப்பதையும், தொழில் துறைகளை அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட தொகுதிகளைப் பின்பற்றலாம்.

13ஆம் வகுப்பில், மாணவர்களுக்கு ஏற்ற தொழிலில் NVQ நிலை 4 பயிற்சிக்காக, பாடசாலையே ஒரு அரச தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு பரிந்துரைக்கும்.
சாதாரண தரப் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் தோல்வியடைந்தாலும், பதின்மூன்று வருட கல்வியை மாணவர்களுக்கு உத்தரவாதம் செய்யும் நோக்கத்துடன், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் இந்தப் பிரிவு செயல்படுத்தப்படுகிறது.

No comments: