News Just In

7/22/2025 05:00:00 PM

கடந்த அரசாங்க Cathlab வழங்குவதை ஏமாற்றியதை போன்று இந்த அரசாங்கமும் செயற்படுமா?சபையில் இரா, சாணக்கியன்

கடந்த அரசாங்க Cathlab வழங்குவதை ஏமாற்றியதை போன்று இந்த அரசாங்கமும் செயற்படுமா?சபையில் சாணக்கியன் 


கடந்த அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கமும் தமிழ் மக்களுக்கான சேவைகளை துரிதமாக வழங்குவதில் இருந்து பின்வாங்குகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(22) பாராளுமன்றத்தில் வாய்மொழி விடைக்கான வினாக்கள் கேட்கும் நேரத்தின் போது சுகாதார அமைச்சரிடம் ஒசுசல, Cathlab இயந்திரங்கள், மாகாண சபைக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கான தேவைகள் குறித்து சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களினால் வினாக்கள் கேட்டகப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நாம் களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு நகர் மற்றும் வாழைச்சேனை ஆகிய மூன்று இடங்களுக்கு ஒசுசல தேவையென கோரியிருந்தோம். இந்த மூன்று பிரதேசங்களும் சனத்தொகை கூடிய இடங்களுக்கு சேவை வழங்கும் வைத்தியசாலைகள் உள்ளன. 2018ம் ஆண்டு ஒசுசல நிறுவனத்தினர் நேரடியாகவே களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு விஜயம் செய்து குறித்த வைத்தியசாலையில் கட்டிடம் இருந்தால் ஒசுசல ஆரம்பிக்கலாம் என சிபார்சு செய்யப்பட்டது. இருப்பினும் குறித்த ஒசுசல நிறுவுவதற்காக ஒரு கட்டடிடம் அமைக்கப்பட்டு தற்போது அது மூடிய நிலையில் உள்ளது. கடந்த காலங்களில் அபிவிருத்தி குழு கூட்டங்களின் போது மாவட்டத்திற்கு ஒரு ஒசுசல வழங்குவதாகவும் அதற்காக காணியினை விடுவிப்பதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு நகரில் ஒசுசல அமைக்கப்படுகின்ற போது, கட்டிட வசதியுள்ள களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையிலும் இரண்டாவது ஒசுசல அமைப்பதற்கு கோரிக்கை விடுத்தார்.

மேலும், மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லப்படும் நிலை உருவாகி வருவதாகவும், இது மாகாண சபையை பலவீனமாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய அரசாங்கத்தின் பரிபாலனத்தின் கீழுள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியத்தினூடாக Cathlab, MRI Scanner, CT Sacanner ஆகிய மூன்று இயந்திரங்களும் அனுமதி கிடைத்திருந்தது. 2021 ஆம் ஆண்டு மட்டக்களப்பிற்காக இறக்குமதி செய்யப்பட்ட Cathlab, அமைச்சரின் களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது என்பது வரலாற்றுப் பதிவு. மட்டக்களப்பிற்கென்று வரவிருக்கும் CT Sacanner இங்கு தேவையில்லை என்று வெட்டப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். அதேவேளை சுகாதார அமைச்சரின் மட்டக்களப்பு வைத்தியசாலை விஜயத்தின் போது MRI Scanner வழங்குவதாக வாக்குறுதி வழங்கியுள்ளீர்கள். எனக்கு உங்களுடைய வாக்குறுதி தேவை. ADB நிதியத்தினூடாக மட்டக்களப்பிற்கென்று வழங்கப்பட்ட மூன்று இயந்திரங்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்கு வேண்டுமென்ற வாக்குறுதியை நீங்கள் வழங்க வேண்டும் என தெரிவித்ததுடன் மாகாண சபை வைத்தியசாலைகள் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்குகின்றன என்றும், அவற்றுக்கான தேவைகள் பல அபிவிருத்தி கூட்டங்களில் விவாதிக்கப்பட்டுள்ளன என்றும் சாணக்கியன் தெரிவித்தார். இந்த தேவைகளை மத்திய அரசின் ஊடாக நிறைவேற்ற முடியுமா எனவும் அவர் கேட்டார்

இதற்கிடையில், சுகாதார அமைச்சர், இந்த மூன்று கேள்விகளுக்கும் தெளிவான பதிலை வழங்கத் தவறியதாகவும், இதன்மூலம் கடந்த அரசாங்கங்களைப் போன்று, தற்போதைய அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு சேவைகள் வழங்குவதிலிருந்து பின்வாங்குகிறது என்பதை இது காட்டுவதாகவும் சாணக்கியன் விமர்சித்தார்.

No comments: