மறைந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்களின் ஓராண்டு நினைவு வணக்க அஞ்சலி நிகழ்வு வவுணதீவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுணதீவுப் பிரதேச கிளையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
வணக்க அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டு மாநகர முதல்வர், பிரதிமுதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதிதவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டு மறைந்த பெருந்தலைவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர். இதன் போது தீபச்சுடர், மலரஞ்சலி, நினைவுப்பேருரை போன்றன நிகழ்வுகள் இடம்பெற்றது.
No comments: