சம்மாந்துறை ஆலையடி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தை முறையாக மேம்படுத்தி, ஒரு பரந்த அளவிலான விளையாட்டு மையமாக மாற்றும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மைதானத்தை சுற்றி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த மைதானம், இளைஞர்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த ஒன்றாகும். இளம் தலைமுறையினரின் விளையாட்டு வளர்ச்சிக்காகவும், சமூக நிகழ்வுகளுக்கான இடமாகவும், போதைப் பாவனை அற்ற இளைஞர் சமூகத்தின் உருவாக்கம் தொடர்பாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஒன்றாக இது காணப்படுகிறது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பும், மைதானத்தின் இயற்கை அழகிய அமைப்பும் பேணப்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் ; மிகுந்த அர்ப்பணிப்புடன் இம்மைதான அபிவிருத்திக்காக தொடர்ந்து பாடுபட்டு வருபவர் எனது நெருங்கிய சகோதரர் அனிஸ். அவரது முயற்சி, சமூக நலனுக்காக உழைக்கும் ஒவ்வொருவருக்கும் உந்துசக்தியாக அமைகிறது. அவரது பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிரதேச சபையின் ஊடாக தேவையான ஒத்துழைப்பை வழங்க முனைவோம் என்றார்.
மேலும், இதே போன்று, சமூக நலனுக்காக செயல்படும் ஒவ்வொரு நபரின் பங்களிப்பும், சம்மாந்துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதில் உறுதியோடு உள்ளேன். அத்தோடு, கெளரவ தவிசாளரின் வழிகாட்டலில், இந்த சபையில் பெரும்பாலான உறுப்பினர்கள் விளையாட்டுடன் தொடர்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களும் தங்களால் இயலுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு எமதூரின் வளமான இந்த மைதானத்தை முழுமையாக அமைக்க அயராது முயற்சிப்போம் என்றார்.
இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர் ஆஷிக் அஹமத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

No comments: