News Just In

7/30/2025 12:28:00 PM

அதிகரிக்கும் பதற்றம்.. ஹவாயை தாக்கிய முதல் சுனாமி அலை!

அதிகரிக்கும் பதற்றம்.. ஹவாயை தாக்கிய முதல் சுனாமி அலை!


அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தரவுகளின்படி, சுனாமி அலைகள் அமெரிக்க கடற்கரைகளைத் தாக்கத் தொடங்கியுள்ளன.

அதன்படி, சுனாமியின் முதல் அலைகள் ஹவாயின் கடற்கரைகளை அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த தரவுகளின்படி, ஹவாயின் ஓஹு தீவின் வடக்குக் கரையில் உள்ள ஹலீவாவில் நீர் மட்டம் 4 அடிக்கு (1.2 மீட்டர்) மேல் பதிவாகியுள்ளது. அதிக அலைகள் நெருங்கும்போது நீர் மட்டங்கள் உயர்ந்து குறைவதை காண வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, அலாஸ்காவை முன்னதாகவே முதல் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தற்போது அலைகள் ஹவாயைத் தாக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அமெரிக்காவின் பிற பகுதிகளிலும் சுனாமி அலைகள் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக எச்சரித்துள்ளது.


No comments: