கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்க போட்டிகள் ஜூலை 11,12,13 ஆம் திகதிகளில் திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த போட்டி நிகழ்ச்சிகளில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகள் 20 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மாகாணமட்ட சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை தேசிய மட்ட போட்டிகளுக்கு ஊக்கப்படுத்தி கௌரவப்படுத்தும் நோக்கில் மஹ்மூத் மகளிர் கல்லூரி சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வு
கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம், கெளரவ அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் ஆகியோர் கலந்து கொண்டனர். சதுரங்க வரலாற்று சாதனை படைத்த மஹ்மூத் மாணவிகள் கல்லூரி முன்றலில் பூ மாலை அணிவிக்கப்பட்டு இசை வாத்தியங்கள் முழங்க சாரணிய முதலுதவி அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டதுடன் வெற்றி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.உடற்கல்வி பாட ஆசிரிய, ஆசிரியைகள் அதிதிகள் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டிக்காக மாணவிகளை திறன்பட பயிற்றுவித்த உடற்கல்வி பாட ஆசிரியை எம்.ஜ. ரபீக்கா பீவி (தரம் - 08 பகுதித் தலைவி), எம்.ஜ. சாமிலா (தரம் - 09 பகுதித் தலைவி), உடற்கல்வி பாட ஆசிரியர்களான றிஸ்மி மஜீட், எம்.ஆர்.எம். றப்கான், எம்.எம். றிசான், ஆர்.எம். அஸ்மி, எம்.வை.எம்.றகீப், எஸ்.எல்.எம். சுஹ்தான் மற்றும் மாணவிகளை ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக கல்லூரி அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதி, உதவி அதிபர்கள், பொறுப்பாசிரியர் கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், பகுதித் தலைவர்கள் ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் றிசாத் ஷெரீப் உட்பட உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நூருல் ஹுதா உமர்
No comments: