News Just In

6/19/2025 08:10:00 AM

தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை!


தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை!





வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம் கட்சியின் தீர்மானத்தை மீறி நடுநிலை வகித்தமை தொடர்பில் கட்சியினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

ஒரு வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் உறுப்பினர் கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தபடுவார் எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

No comments: