News Just In

6/15/2025 08:37:00 PM

சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலய பதில் அதிபராக திருமதி எம்.எச். நுஸ்ரத் பேகம் பொறுப்பேற்றுள்ளார்

சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலய பதில் அதிபராக திருமதி எம்.எச். நுஸ்ரத் பேகம் பொறுப்பேற்றுள்ளார்.


நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய முன்னணி பாடசாலைகளில் ஒன்றான சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலய பதிலதிபராக அதிபர் சேவை தரம் இரண்டை சேர்ந்த திருமதி எம்.எச். நுஸ்ரத் பேகம் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த 12/06/2025 வியாழக்கிழமை இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் யூ எல் நஸார் அவர்களின் ஓய்வை தொடர்ந்து பிரதியதிபராக கடமையாற்றிய இவர் பதில் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இப் பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் பொறியியலாளர் கமால் நிஷாத், பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பாடசாலை முகாமைத்துவ குழுவினர் முன்னிலையில் முன்னாள் அதிபர் யூ எல் நஸார் அவர்களிடமிருந்து திருமதி எம்.எச். நுஸ்ரத் பேகம் பாடசாலையின் அதிபர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இப்பாடசாலைக்கு புதிய நிரந்தர அதிபரை நியமிக்க கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முக தேர்வுக்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments: