News Just In

5/14/2025 12:49:00 PM

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள், உறுப்பினர்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள், உறுப்பினர்கள் சந்திப்பு


நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் வேட்பாளர்களாக போட்டியிட்டவர்கள் மற்றும் உறுப்பினர்களாக வெற்றியீட்டியவர்களுடனான சந்திப்பொன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் பங்குபற்றுதலுடன் நேற்று (13) சம்மாந்துறையில் இடம்பெற்றது.

இதன் போது அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. அஷ்ரப் தாஹிர், பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மது, கட்சியின் தவிசாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் கே.அப்துல் றஸாக் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களென பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உள்ளூராட்சி மன்றங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வகிபாகம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது

No comments: