News Just In

5/09/2025 11:15:00 AM

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது



காலாவதியான விசாக்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 முதல் 54 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கம்பஹா - சீதுவை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை பங்களாதேஷிற்கு திருப்பி அனுப்புவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments: