பிள்ளையானின் கைதை பகிரங்கமாக வரவேற்கும் சாணக்கியன்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இந்த கைது நடவடிக்கை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்றைய (09.04.2025) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாணக்கியன் வலியுறுத்தினார்.
காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை மற்றும் அடையாளப்படுத்தப்பட்ட வழக்குகள் ஆகிய இரு விடயங்கள் தொடர்பில் முன்னேற்ற செயன்முறைகளை தெரியப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் நீதிமன்றப் பொறிமுறை இல்லாத எந்தவொரு பொறிமுறையையும் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
4/09/2025 04:01:00 PM
பிள்ளையானின் கைதை பகிரங்கமாக வரவேற்கும் சாணக்கியன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: