News Just In

4/01/2025 03:08:00 PM

சேர்ந்து பயணிப்போம்!

சேர்ந்து பயணிப்போம்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
“எங்களால் முடியும் சேர்ந்து பயணிப்போம் உரிமையை வென்றிடுவோம்" எனும் தொனிப் பொருளில் கிராமங்களிலுள்ள பெண்கள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தி முடித்தனர்.

மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கன்னன்குடா தொடக்கம் காஞ்சிரங்குடா வரையிலான 8 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பெண்களால் உருவாக்கப்பட்ட கொத்தணி அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

53 சுய உதவிக்குழுக்களில் இருந்து 650 க்கு மேற்பட்ட உறுப்பினர்களின் பங்களிப்புடன் நிகழ்வு நடந்தேறியது.

“தன்னம்பிக்கையும் ஒற்றுமையும் பெண் சமுதாயத்தின் பொக்கிஷம், தனியாக இல்லாமல் ஒன்றாக இணைந்து கனவு காண்பதால் கனவை மெய்ப்பிக்கலாம், பெண் வலிமையான சக்தி அவளை அடக்க முடியாது, பெண்ணின் கனவுகள் வரம்பெற்றவை.” உள்ளிட்ட இன்னும் பல பெண்களின் உரிமைகள் தொடர்பான பல்வேறு வாசகங்களை எழுதிய விழிப்புணர்வுப் பதாதைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலமாக வருகை தந்து இந்தப் பொது நிகழ்வு இடம்பெற்றது.

இதில் கொத்தணிகளின் விழிப்புணர்வு தெரு நாடகம், கவிதைகள், கொத்தணிகள் தொடர்பான அறிமுக உரை போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் உள்ளுர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் அலுவலர்களும் கலந்து கொண்டர்.

No comments: