11.03.2025.தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது .
உண்மையில் இந்த விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு முடியாத ஒரு நிலையே காணப்படுகிறது. ஏனென்றால் அரசாங்கம் வரவு செலவு திட்ட உரை நிகழும் காலத்திலேயே தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுத்து வேட்பு மனுக்களை கோரி, ஒரு சங்கடமான நிலையிலேயே தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு உரையாற்றிக் கொண்டு இருக்கின்றனர். நான் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் பாராளுமன்றத்தில் இருப்பேன். நாம் ஜனநாயக ரீதியில் மக்களின் வாக்குகளை பெற்று தெரிவாகிய போதிலும் மக்களின் தேவையை சரியாக நிறைவேற்ற முடியாமை துரதிஷ்டவசமானது. உண்மையில் எதிர்காலத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பு பாரிய பொறுப்பு டிஜிட்டல் துறை அமைச்சுக்கு உண்டு. அதற்கு காரணம், நாங்கள் தென் இந்தியாவை உதாரணமாக எடுத்துக் கொண்டால் தென்னிந்தியாவின் தென் மாநிலங்களில் பெங்களூர் போன்றவற்றை எடுத்து நோக்கினால் அவை தகவல் தொழில்நுட்பத்துறை ஊடாகவே அபிவிருத்தி அடைந்துள்ளது. ஆனால் நாம் ஐந்து பத்து ஆண்டுகள் பின்னோக்கியோ உள்ளோம். நிறைய செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இந்த தகவல் தொழில்நுட்பத் துறை ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய அடிப்படை வசதிகளை இந்த அரசாங்கம் தலையீடு செய்து மேற்கொள்ளும் என்ற நம்பிக்கையில் பலரும் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தனர். ஆனால் இந்த தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள கீழ் மட்டத் தரப்பினர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையையே இந்த அரசாங்கத்தில் நமக்கு காணக் கூடியதாக உள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் நாட்டை கட்டியெழுப்பவும் வரி விதிக்கப்படுவது அவசியம். ஆனால், வரி விதிப்பது தவறு என்பதை சுட்டிக்காட்டி கடந்த அரசாங்க காலப்பகுதியில் அதாலது 2023 ஆகஸ்ட் மாதம் தற்போதுள்ள நிதி பிரதி அமைச்சர் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். ஆனால் மக்களினதும், இந்த துறையில் உள்ளவர்களின் பிரச்சினை என்னவென்றால் பதவிக்கு வரும் முன்னர் இவ்வாறான ஒரு கருத்தை தெரிவித்துவிட்டு தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் வரி விதிப்பதே ஆகும்.
பாரிய தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடந்த அரசாங்க காலப்பகுதியில் வழங்கப்பட்ட வரி நிவாரணம் இந்த அரசாங்கத்திலும் வழங்கப்படுகிறது. அதனை இரத்து செய்வதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவற்றை இரத்து செய்ய முடியாது என்றும் எங்கும் குறிப்பிடப்படவில்லை. நான் வரவு செலவு திட்ட உரையின் போது தொடர்ந்தும் இது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தேன். 2024இல் முடிவடைந்த ஆண்டில் 966 பில்லியன் ரூபாய் வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்திலும் அது தொடர்ந்து வழங்கப்படுகிறது. இந்த 966 பில்லியனுக்குள் தகவல் தொழில்நுட்பத்துறையுடன் தொடர்புடைய பாரிய அளவிலான நிறுவனங்களும் உள்ளடங்குகின்றன. இந்த வருவாய் கணக்கீட்டின் போது மாதாந்தம் ஒன்றரை இலட்சத்திற்கு உட்பட்ட சம்பளம் பெறுவோருக்கு வரி விதிக்கப்படாது. அதற்கு மேலானோருக்கு வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்த பாரியளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வரி விதிக்கப்படாது, இந்த அரசாங்கத்தின் வரி விதிப்பு கொள்கை மீது மக்கள் பாரிய அதிருப்தி கொண்டுள்ளனர்.
ஒன்லைன் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளருக்கு கொள்வனவு செய்யும் பொருள் மீது முழு நம்பிக்கை இல்லாவிடின் PayPal முறையின் ஊடாக அந்த கொடுப்பனவை செலுத்தினால் கொள்வனவு செய்யும் பொருளில் ஏதேனும் பிரச்சினை காணப்படின் இந்த PayPal முறைமை ஊடாக அதற்கான பணத்தை மீளப்பொற்றுக் கொள்ள முடியும். இவ்வாறான ஒரு முறை காணப்படுவதால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அதாவது தெற்காசியாவில் உள்ள பல நாடுகள் இந்த PayPal முறை ஊடாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் மாத்திரமல்ல இணையத்தை அடிப்படையாகக் கொண்டு பல வணிகங்கள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இந்த வரி விதிப்பை ஒரு புறம் வைத்துவிட்டு இந்த PayPal போன்ற முறைகளை இலங்கைக்குள் கொண்டு வருவதற்கான ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதையே நாம் இந்த அரசாங்கத்திடம் எதிர்பார்த்தது. இது தொடர்பில் இதற்கு முன்னதாக கூறப்பட்டதா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் PayPal ஊடாக இலங்கைக்குள் ஒரு கொடுப்பனவை ஈர்ப்பது தொடர்பில் எங்கும் விவாதிக்கப்படவில்லை. நாட்டில் தற்போது இந்த தகவல் தொழில்நட்பத்துறையுடன் தொடர்புபட்டிருக்கும் மக்களுக்கு கிடைத்த ஒரே விடயம் வரி விதிப்பு மாத்திரமே. வரி விதிப்பிற்கு நாம் எதிரானவர்கள் அல்ல.
மகளிர் தினத்தன்று பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவாகியிருந்து சில கருத்து பதிவுகளை சபாநாயகர் வாசித்திருந்தார். அதனால் இந்த வரி கொள்கை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவாகியிருந்த கருத்து பதிவுகளை பற்றி நோக்குவோம் என்று நான் எண்ணினேன். சாதாரண மக்களின் மோட்டார் வண்டிக்கு, சிறிய காருக்கு வரி விதித்து, செல்வந்தர்களுக்கு மாத்திரம் வாகனங்களை கொள்வனவு செய்ய இடமளித்தமை குறித்து நிம்மதியாக உள்ளது. இதில் உள்ள சகல கருத்த பதிவுகளையும் வாசிக்க எனக்கு வெட்கமாக உள்ளது. இவற்றிலிருந்து மக்கள் இந்த அரசாங்கம் மீது தற்போது கொண்டுள்ள நிலைப்பாடு தெளிவாகிறது.
குறிப்பிட்ட ஒரு நபரை விடுதலை செய்யுமாறு அல்லது ஏதேனுமொன்றை செய்து தருமாறு எமது தரப்பிடமிருந்து ஏதேனும் அழுத்தங்கள் அல்லது அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளனவா என எமது பிரதமர் ஒரு கூட்டத்தின் போது பொலிஸாரிடம் வினவியிருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உங்களது கட்சி ஒருங்கிணைப்பாளர்களின் செயற்பாடுகள் மிகவும் கீழ்த்தரமானது. உங்களது கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களிடம் இது பற்றி குறிப்பிட்டால், அவர் எமது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இல்லை என அவர் கூறுகின்றார். அடுத்தது உங்களது மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அருண் ஹேமசந்திர அவர்களிடம் இது பற்றி குறிப்பிட்டால், அவரும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இன்று உங்களது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்த சென்று தற்போது பொலிஸ் நிலையத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று பிரதேச செயலாளரை அச்சுறுத்தி உள்ளனர். இவ்வாறு செய்ய வேண்டாம் என அவர் உங்களது பாராளுமன்ற உறுப்பினரிடம் குறிப்பிட்டுள்ளார். பிரதேச சபைக்கு சென்று அச்சுறுத்துகின்றனர். வைத்தியசாலைகளுக்கு சென்று அச்சுறுத்துகின்றனர். நான் கூறும் இந்த ஒருங்கிணைப்பாளர் அண்மையில் குடி போதையில் ஒரு பிரதேசத்திற்கு சென்று பிரச்சினையை ஏற்படுத்தி தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனால் நான் மீண்டுமொரு முறை தெரிவிப்பது என்னவென்றால் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். இந்த பிள்ளையானைவிட மோசமான செயற்பாடுகளிலேயே மட்டக்களப்பில் தற்போது உங்களது கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பில் கணனியை இதுவரை தொட்டு கூட பார்த்திராத பிள்ளைகளுக்கு கணனி வழங்குவீர்கள். பாடசாலைகளுக்கு கணனிகளை வழங்குவீர்கள் என்றே நாம் உங்களது அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்தோம். ஆனால் உங்களது ஒருங்கிணைப்பாளர்கள் எமது மக்களை அச்சுறுத்தும் செயற்பாடே இடம்பெறுகிறது.

No comments: