
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் போட்டியிட உள்ள பிரதான அரசியல் கட்சிகள் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை(17) தமது கட்டுப்பணங்களை செலுத்தின.
அதன்படி, இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நழீம் தலைமையில் அவர்களது கட்சிக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
மேலும், உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தமக்கான கட்டுப்பணங்களை செலுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.
No comments: